ஆதரவற்ற முதியோருக்கு உணவு வழங்கி பிறந்தநாளை கொண்டாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன்… குவியும் வாழ்த்துக்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட ஒரு தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட்,  குமரன் தங்கராஜன், ஹேமா, சரவண விக்ரம், தீபிகா  என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை.

   

இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.  மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங்  செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல். பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் உண்மையான பெயர் சரவணா விக்ரம்.

இவர் முதன் முதலில் ‘கண்மணி’ என்ற குறும்படம் மூலம் தான் அறியப்பட்டார். அதே போல இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தான்.

இந்த நிலையில் இவர் தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். இதைத்தொடர்ந்து ஆதரவற்ற முதியோருக்கு உணவு வழங்கிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ‘தன்னுடைய மிக சிறந்த பிறந்தநாள்’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)