‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிக்கும் பிரபல நடிகரின் ஹேர் விக்கா…  அவரின் ஒரிஜினல் ஹேர்ஸ்டைல் இதுதானா?… வைரலாகும் புகைப்படம் இதோ…

விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். பாசத்தையும், ஒற்றுமையையும், கூட்டுக் குடும்பத்தை பற்றியும் குறிப்பிடுவதால் இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.

   

தற்போது இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் வெங்கட் ரங்கநாதன். இவர் இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளார். நடிகர் வெங்கட் ரங்கநாதன் முதன்முதலாக சின்னத்திரையில் தொகுப்பாளராக  அறிமுகமானார்.

இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்ற சீரியல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் மற்ற சீரியல்களில் நடித்து  பிரபலமானதை விட, தற்பொழுது இவர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஏற்று நடிக்கும் ஜீவா கதாபாத்திரம் மூலம் தான் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொண்டாடப்பட்டு வருகிறார்.

தற்போது இவரை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் ஜீவா விக் வைத்துக் கொண்டுதான் இந்த சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறாரா.ம் இதைத்தொடர்ந்து இவரது ஒரிஜினல் ஹேர் ஸ்டைல் உடன் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

வைரலாகும்  அந்த புகைப்படம் இதோ…