அம்பானி என்ன பெரிய அம்பானி.. 43 வருசத்துக்கு முன்னாடியே.. அத்தனை கோடி ரூபாய் செலவில் திருமணம்.. அந்த பிரபலம் யார் தெரியுமா..?

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் குறித்தும் அந்த திருமணத்தில் செலவு செய்யப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் குறித்தும் தான் இணையதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் இந்த திருமணம் பற்றி பேசியிருக்கிறார்.

   

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, இதற்கு முன்பு உலகிலேயே அதிக செலவில் திருமணம் நடந்தது என்றால் அது டயானாவின் திருமணம் தான். மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் திருமணத்தில் 914 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. அந்த ரெக்கார்டை யாரும் முறியடிக்கவில்லை.

அதனை முறியடிக்கும் வகையில், முகேஷ் அம்பானி ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தன் மகனுக்கு திருமணம் நடத்தி விட்டார். அந்த திருமணத்தில் உலகெங்கும் இருக்கும் விஐபிகள் அழைக்கப்பட்திருந்தார்கள். அதன் மூலம், அவரின் ரிலயன்ஸ் நிறுவனம் உலகம் முழக்க பரவும். அவர், பல லட்சம் கோடி சம்பாதிக்கலாம். முகேஷ் அம்பானி தன் மகனின் திருமணத்தை முதலீடாக மாற்றிக் கொண்டார் என்று செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.