கர்ப்பகால புகைப்படத்தை பகிர்ந்த பிரியா அட்லி… ‘எங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத நாள்’… வைரலாகும் புகைப்படங்கள்… நீங்களே பாருங்க….

இயக்குனர் அட்லியின் மனைவியான பிரியா அட்லீ தனது கர்ப்பகால புகைப்படத்தை தற்பொழுது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு திரைப்படங்களிலும்  உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 2013ல் வெளியான ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயுடன் கைகோர்த்து ‘தெறி’ எனும் படத்தை இயக்கி தெறிக்க விட்டார்.

   

இதன்பின் மீண்டும் இரண்டு முறை விஜயுடன் இணைந்து மெர்சல், பிகில் என தொடர் வெற்றியை பெற்றார். இத்திரைப்படங்கள் தாறுமாறான வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது 54 வது பிறந்தநாள் அன்று தன் அடுத்த படத்தின் இயக்குனர் அட்லி என்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் பாலிவுட் திரை உலக முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது .கோலிவுட்டில் கலக்கி விட்டு பாலிவுட்டிலும் கால் பதித்து கலக்கி வருகிறார் அட்லி.

இயக்குனர் அட்லீ 2014ல் நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர் தனது ரசிகர்களுக்கு அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார். தற்பொழுது பிரியா அட்லீயின் சீமந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது பிரியா அட்லீ தனது இணையத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த பதிவில் ‘தங்களது  வாழ்க்கையின் மறக்க முடியாத நாள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் . தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

வைரலாகும் அந்த பதிவு இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Priya Mohan (@priyaatlee)