அப்பா பேச்சை மதிக்காமல் பேராசையில் டாப் ஹீரோவை சந்தித்த சஞ்சய்… உனக்கு வயசு பத்தல என்ன திருப்பி அனுப்பிச் சோகம்… ..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவரின்  மகன்  சஞ்சய் சினிமாவில் நடிகராக விருப்பம் இல்லாத காரணத்தினால் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கிய சஞ்சய் இப்போது மிகப்பெரிய நிறுவனமான லைக்கா உடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.

   

மேலும் அவருடைய முதல் படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் சஞ்சய் முதலில் விஜய்யின் படத்தை தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி, கவின் போன்ற நடிகர்கள் தான் சஞ்சய் லிஸ்டில் இடம்பெறுகிறார்கள். ஆனாலும் இவர்களை தவிர்த்து டாப் ஹீரோ ஒருவரின் படத்தை இயக்க பெரிதும் ஆசைப்பட்டிருக்கிறார்.

அதாவது அஜித்தின் ஒரு படத்தையாவது இயக்கி விட வேண்டும் என்பதுதான் சஞ்சயின் ஆசையாம். விஜய் மற்றும் அஜித் இருவரின் ரசிகர்கள் இடையே ஒரு போரே போய்க் கொண்டு இருப்பது இந்த ஊர் உலகத்திற்கே தெரிந்த விஷயம். இப்படி இருக்கும் சூழலில் அப்பாவை மதிக்காமல் அஜித் படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக சஞ்சய் சென்றிருக்கிறார்.

 

இதற்கு தளபதியும் ஒன்றும் சொல்லவில்லையாம். ஆனால் அஜித்தை சந்தித்து இது குறித்து சஞ்சய் பேசும் போது இப்போது படம் வேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பது போல சொல்லி இருக்கிறாராம். ஏனென்றால் சஞ்சய் இப்போது தான் வெள்ளித்திரையில் முதல் படத்தையே இயக்க உள்ளார்.

டாப் ஹீரோவாக இருக்கும் அஜித் அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் படங்களில் நடிக்க தான் விருப்பப்படுகிறார். ஆகையால் இப்போது உனக்கு வயசு பத்தவில்லை சில படங்களை இயக்க பின்பு கண்டிப்பாக நடிக்கிறேன் என்பது போல சொல்லி அனுப்பி உள்ளார். இதனால் சஞ்சய் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

 

அதன் பிறகு லைக்காவின் சிபாரிசாலும் அஜித்திடம் பேசும் எந்த பிரயோஜனமும் இல்லையாம். ஆனால் கண்டிப்பாக ஒருநாள் என்னுடைய படத்தில் அஜித் நடிப்பார் என்று சஞ்சய் உறுதியாக இருக்கிறாராம். இப்போது அவருக்கு ஏமாற்றம் கிடைத்தாலும் சஞ்சய் நினைத்ததை சாதித்துக் காட்டுவார் என்ற நம்பிக்கை விஜய்க்கும் இருக்கிறதாம்.