இந்த புகைப்படத்தில் கியூட்டாக இருக்கும் பிரபல முன்னணி நடிகை யார் தெரியுமா?… Guess பண்ணுங்க பாக்கலாம்…

வெள்ளித்திரை நாயகிகளுக்கு இணையாக சின்னத்திரை நாயகிகளும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றனர்.  அவர்களில் ஒருவர்தான் ரேஷ்மா முரளிதரன். கேரளாவின் கோட்டயத்தில் பிறந்த ரேஷ்மா முரளிதரன், சென்னை NSN மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகளிர் வைஷ்ணவ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர்,

   

ஜீ தமிழ் டிவியின்’ டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதனையடுத்து ஜீ தமிழின் மிகவும் பிரபலமான பூவே பூச்சூடவா சீரியல் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் ரேஷ்மா முரளிதரன். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மையமாக வைத்து கதைக்களம் நகர்ந்த நிலையில் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்களைப் பெற்றார்.

இந்நிலையில் தான் இச்சீரியலில் ரேஷ்மாவின் அக்காவின் கணவராக மதனுக்கும் ரேஷ்மாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து இருவரும் கடந்த நவம்பர் 2021-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் சீரியலில் நடித்ததோடு மட்டுமில்லாமல், பல ரியாலிட்டி ஷோக்களிலும் ஜோடியாக வலம் வந்தனர்.

பின்னர் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் அபி டெயிலர் என்ற சீரியலில் ஹீரோயினாக ரேஷ்மா நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக அவரது கணவர் மதன் பாண்டியன் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள கிழக்கு வாசல் சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

சமீப காலமாகவே பிரபலங்களின்  சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரனின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.