நடிகை கீர்த்தி சுரேஷா இது?… நாளுக்கு நாள் உங்க அழகு கூடிகிட்டே போகுதே… மும்பையில் தோழியுடன் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்…

‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிஸியான  நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் அவர் நடித்த பல படங்கள் படுதோல்வியை கொடுத்து ராசியில்லாத நடிகை என்ற பெயரையும் கொடுத்தது.

   

இவர் நடிப்பில் தற்பொழுது ‘மாமன்னன்’ திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.இத்திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படமாக மாமன்னன் திரைப்படம் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இத்திரைப்படத்தை  எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் சைரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இது மட்டுமின்றி ரிவால்வர் ரீட்டா, ரகுநாதா போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி உடன் போலோ சங்கர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி நடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அடிக்கடி காதல் கிசுகிசுக்களும் பரவிக் கொண்டுதான் வருகிறது. தற்பொழுது பல  படங்களில் கமிட்டாகி நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் தனது தோழியான ஐஸ்வர்யா சுரேஷ் பிறந்த நாளுக்கு கன்னத்தில் முத்தமிட்ட செல்பி புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதை தொடர்ந்து தற்பொழுது தனது தோழியுடன் இணைந்து மும்பையில் ஜாலியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.