‘டிஸ்னிலாண்ட் பாரிசில் எடுக்கப்பட்ட சில மாயாஜால தருணங்கள்’… அழகிய புகைப்படங்களை பகிர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி…

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கும், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கலும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

   

இதைதொடர்ந்த்து இருவரும் 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, இந்தத் தம்பதிக்கு 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

இதனை தங்களது சமூக வலைத்தளம் மூலம், இந்த தம்பதி மகிழ்ச்சியுடன் அறிவித்தனர். இந்நிலையில், சில உடல்நிலை பிரச்சனைகள் காரணமாக, தனது குழந்தைகளுக்கு, தாய்ப்பால் கொடுப்பதில் தீபிகா பல்லிக்கலுக்கு பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து தீபிகாவின் இரட்டை குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில், அவருடைய மருத்துவர், நியோலாக்டோ லைஃப் சயின்சஸ் தாய்ப்பால் வங்கியை பயன்படுத்துமாறு பரிந்துரை செய்தார்.

இதுபற்றி தீபிகா பல்லிக்கல் கூறுகையில், “நான் பல முயற்சிகள் எடுத்தப்போதிலும், எனது இரட்டைக் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது எனக்கு ஒரு சவாலாக இருந்தது.

அப்போதுதான் நியோலாக்டா லைஃப் சயின்சஸ் தாய்ப்பால் குறித்து எனது மருத்துவர் கூறினார். இதற்கு நான் அவருக்கு நன்றி சொல்லிய ஆகவேண்டும்’ என்றும் ,எங்களது குழந்தைகளுக்கு அதையே நாங்கள் பயன்படுத்துகிறோம் என்றும் கூறியிருந்தார்.

தற்பொழுது இவர்கள் இருவரும் குழந்தை பிறந்த பிறகு விளையாட்டு துறையில் மீண்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். தங்கள் குழந்தைகளையும் நல்லபடியாக கவனித்து வருகின்றனர்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மனைவி தீபிகா பல்லிகல். இவர் தற்பொழுது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இணைந்து பாரிசிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு அமைந்துள்ள டிஸ்னிலாண்டில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது .