ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் மனைவியா இது?.. ஹீரோயினி போல் இருக்காங்களே.. வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்..!!

தென்னிந்திய திரையுலகை பொருத்தவரையில் முன்னணி சண்டை பயிற்சி கலைஞராக திகழ்ந்து கொண்டிருப்பவர்தான் பீட்டர் ஹெய்ன்.

   

இவர் பெரும்பாலான திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் சண்டை பயிற்சி கலைஞராக பணியாற்றியுள்ளார்.

குறிப்பாக ரஜினி, விஜய் மற்றும் கமல் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இவர் தான் சண்டை பயிற்சி கற்றுக் கொடுத்துள்ளார்.

திரை துறையை சார்ந்த கலைஞர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருது மிகவும் முக்கியமானது.

தென்னிந்திய திரை உலகில் பலருக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வந்தாலும் சண்டை பயிற்சி கலைஞர்களுக்கு மட்டும் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த பிரிவில் முதல் முறையாக விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டது.

அதில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான புலி முருகன் திரைப்படத்திற்காக இந்த விருதை முதல் முறையாக பீட்டர் ஹெய்ன் வென்றார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு பல பாராட்டுகள் குவிந்தன. இதனைத் தவிர பல்வேறு மாநில விருதுகளையும் ஃபிலிம் பேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் திரைப்படங்களில் இவர் அதிகம் பணியாற்றியுள்ளார்.

முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இவரின் பெயர் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். குறிப்பாக ரஜினியின் எந்திரன், பாகுபலி, கஜினி உள்ளிட்ட பல திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குனராக இவர் பணியாற்றியுள்ளார்.

சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கி வரும் இவர் தற்போது சினிமாவில் மிகவும் பிசியான இயக்குனராகவும் வளர்ந்து வருகிறார்.

இவர் பார்வதி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இவர் திரை உலகை சேர்ந்த பிரபலம் இல்லை என்றாலும் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களுடன் பார்வதி நட்பாக பழகி வருகிறார்.

அதன்படி இவர் நடிகை மீனா, ப்ரீத்தா ஹரி, ஸ்ரீதேவி மற்றும் சினேகா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளின் நெருங்கிய தோழி ஆவார்.

இந்நிலையில் பீட்டர் ஹெய்ன் தனது மனைவி மற்றும் மகான் மகளுடன் சேர்ந்து இணைந்து எடுத்துக் கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது