தமிழ் சினிமா நடிகர்களின் நிஜ அம்மா யார் தெரியுமா?.. இதோ ஒரு சிறப்பு தொகுப்பு…

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்கள் ஏராளம். சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை அனைவருமே ஒரு காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது முன்னணி நடிகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களாக ஜொலிக்கும் நடிகர்களின் நிஜ அம்மாக்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன்:

   

மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவரின் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் கொடுத்து வருகின்றன. இவரின் அம்மா ராஜிதாஸ்.

சிம்பு:

குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கிய டி ராஜேந்தர் மகனான சிம்பு தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் அம்மா உஷா ராஜேந்திரன்.

நடிகர் விஜய் சேதுபதி:

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராகவும் குறிப்பாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி வருபவர் தான் விஜய் சேதுபதி. இவருக்கு உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் அம்மா சரஸ்வதி.

தனுஷ்:

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் கோலிவுட் வரை கலக்கிக் கொண்டிருப்பவர் தான் தனுஷ். இவரின் நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ளது. இவரின் அம்மா விஜயலட்சுமி.

நடிகர் விஜய்:

தமிழ் சினிமாவில் தளபதி என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இவரின் தாய் சோபா சந்திரசேகர்.

சூர்யா:

பிரபல நடிகரான சிவகுமாரின் மகன் தான் சூர்யா. இவரின் உடன் பிறந்த தம்பிதான் கார்த்தி. இவர்கள் இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்ற பெயரை பெற்றுள்ளனர். இவர்களின் அம்மா லட்சுமி சிவக்குமார்.

நடிகர் அஜித்:

தமிழ் சினிமாவில் தல என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர் தான் நடிகர் அஜித். இவர் நடிப்பதை தாண்டி கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் மற்றும் பைக் ரெய்டு என அனைத்திலும் பிசியாக இருந்து வருகிறார். இவரின் தந்தை சமீபத்தில் உயிரிழந்த நிலையில் இவரின் தாயார் மோஹினி.

நடிகர் விக்ரம்:

விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இவரின் அம்மா ராஜேஸ்வரி ராஜ்.

கமல்ஹாசன்:

90களில் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்தான் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரின் அம்மா ராஜலட்சுமி.

நடிகர் ரஜினி:

சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். உலக அளவில் ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவரின் அம்மா ஜிஜா பாய்.