அய்யோ இவருக்காக இப்படி?… அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருக்கும் பிக்பாஸ் பாவனி… வெளியான புகைப்படங்கள்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அவ்வகையில் கோடிக்கணக்கான ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.

   

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் இன் மூலம் அறிமுகமானவர் பாவனி. பின்பு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதில் வைல் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்தவர் அமீர். அதன் பிறகு அவர் பாவனியிடம் நெருக்கமாக பழகியதால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பலரும் கூறி வந்தனர்.

பிக் பாஸ் முடிந்த பிறகும் கூட இருவரும் வெளியிடங்களில் ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள்.

அண்மையில் விஜய் டிவியில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு அசத்தினர்.

அதில் பல்வேறு வேடங்களை அணிந்து நடனமாடி வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் காதல் ப்ரபோஸ் செய்வது மற்றும் அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்வது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.

விஜய் டிவியில் தற்போது காதல் புறாக்களாக பலம் வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் சமீபத்தில் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர்.

இந்நிலையில் பாவனி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

மேலும் அவருக்கு தோள்பட்டையில் நீண்ட நாட்கள் ஆக வலி இருந்ததால் தற்போது அதற்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ளது.

மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை பாவனி வெளியீட்டு உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.