தமிழ் சினிமாவில் ஒன்றாக நடித்த ரியல் அப்பா – மகன் ஜோடி…. யார் யார் தெரியுமா… இதோ ஒரு தொகுப்பு….!

தென்னிந்திய திரை உலகில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து திரையுலகில் நடித்துக் கொண்டிருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் என அனைவரும் திரையுலகில் நுழைந்துள்ளனர். அதன்படி நிஜ வாழ்க்கையில் அப்பா மகன் இரட்டையர்கள் படங்களில் ஒன்றாக நடித்ததில் ஆச்சரியம் இல்லை என்றாலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த நாட்களில் பெரிய நட்சத்திரங்கள் தங்களின் குழந்தைகளை குறிப்பாக மகன்களை தங்கள் அடிச்சுவடுகளை பின்பற்றி திரையுலகில் முத்திரை பதிக்க அடிக்கடி வளர்க்கிறார்கள். அப்படி திரை உலகில் கலக்கும் அப்பா – பையன் ஜோடி குறித்த புகைப்படங்கள் இதோ.

   

விஜய் சேதுபதி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் சேதுபதியின் மகன் தான் சூர்யா. நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் குழந்தை பருவத்தை சூர்யா தான் நடித்திருந்தார். தற்போது சிந்துபாத் என்ற திரைப்படத்தில் அப்பா மகன் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கின்றனர்.

நடிகர் ஜெயம் ரவி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவிக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கிய டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவியும் அவரின் மகன் ஆரவ் ரவியும் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் அப்பா மந்திரவாதியாக நடித்த போது மகன் அவரின் ரீல் லைப் மகனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கார்த்திக் : 90களில் முன்னணி நடிகராக திகழ்ந்த நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் தான் கௌதம் கார்த்திக். பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் கார்த்திக் சினிமாவில் அறிமுகமானார். அவரின் மகன் கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இருவரும் இறுதியாக திரு இயக்கிய திரு சந்திரமௌலியில் இணைந்து நடித்தனர்.

நடிகர் முரளி: 80 மற்றும் 90களில் கலக்கிய நடிகர் தான் முரளி. பத்ரி வெங்கடேஷ் எழுதிய இயக்கிய பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் முரளியின் மகன் அதர்வா நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் முரளி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இது கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் இறப்பதற்கு முன்பு இறுதியாக நடித்த படமாகும்.

நடிகர் எஸ்பி சேகர்: மூத்த நடிகரான எஸ்பி சேகர் மதன்குமார் இயக்கிய மணல் கயிறு 2 திரைப்படத்தில் தனது மகன் அஸ்வினுடன் நடித்தார். 1982 ஆம் ஆண்டு வெளியான மணல் கயிறு திரைப்படத்தின் தொடர்ச்சியான இந்த திரைப்படம் சுமார் 34 வருட இடைவேளைக்கு பிறகு அதே நடிகர்கள் அதே வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் மற்றும் எஸ்வி சேகர் ஆகியோர் ரீல் லைப் மகன் மற்றும் அப்பாவாக நடித்தனர்.

நடிகர் கருணாஸ்: இயக்குனர் மனோ இயக்கிய இந்த தமிழ் நகைச்சுவை நாடகம் ஆனவால் மோதிரம் என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அழகு குட்டி செல்லம் திரைப்படத்தில் கருணாஸ், அங்கனாராய் மற்றும் சஞ்சனா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தில் கருணாஸ் மகன் கென் விருந்தினராக நடித்துள்ளார்.

தம்பி ராமையா: தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா கடந்த 2018 ஆம் ஆண்டு மணியார் குடும்பம் மூலம் இயக்கத்திற்கு திரும்பினார். இந்த திரைப்படத்தில் தம்பி ராமையா தனது மகன் உமாபதி ராமையா உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் நாசர்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நாசர் ஏஎல் விஜய் இயக்கிய சைவம் திரைப்படத்தில் அவரின் இரண்டாவது மகன் லுத்புதீன் இணைந்து நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் செந்திலின் தாத்தாவாக கதிரேசன் வேடத்தில் நாசர் நடித்திருந்தார்.

பாக்கியராஜ்: 90களில் முன்னணி நடிகராக திகழ்ந்த பாக்யராஜின் மகன் தான் சாந்தனு. இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து சிந்து பிளஸ் டூ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். அதேசமயம் இது அவர் எழுதிய திரைப்படமாகும்.

சத்யராஜ்: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் சத்யராஜின் மகன் தான் சிபிராஜ். ஜாக்சன் துரை என்ற திரைப்படத்தில் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இதற்கு முன்னதாக இருவரும் முதலில் ஒன்றாக சேர்ந்து நடித்த திரைப்படம் ஜோர். அதனைப் போலவே வெற்றி வேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர்.

நடிகர் விஜய்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் மகன் சஞ்சய் பாபு சிவம் இயக்கிய திரைப்படமான வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் தனது அப்பாவுடன் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

எஸ் ஏ சந்திரசேகர்: முன்னணி இயக்குனராக திகழ்ந்த எஸ்ஏ சந்திரசேகர் தயாரித்து இயக்கிய சுக்கிரன் என்ற திரைப்படத்தில் விஜய் ஒரு வழக்கறிஞராக நடித்திருந்தார். அதில் எஸ் ஏ சந்திரசேகர் தானே நடித்ததுடன் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார்.

பாண்டியராஜன்: 90களில் கலக்கிய முன்னணி நடிகரான பாண்டியராஜன் எழுதிய கைவந்த கலை திரைப்படத்தில் அவரின் மகன் பிரித்விராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் கண்ணன் என்ற கொள்ளையனாகவும் பாண்டியராஜன் கணேசன் ஆகவும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.