42 வது பிறந்தநாளை தனது செல்ல  நாய்குட்டிகளுடன் கொண்டாடிய தல தோனி… ஒருவழியா தல தரிசனம் கிடைச்சாச்சு…

இந்திய கிரிக்கெட் வீரர்களின் கேப்டனாக  தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஜொலிப்பவர் M.S.தோனி. இவர் 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி என்று அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான்.

   

இவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலத்தை தான் பொற்காலம் என்று கூறப்படுகிறது. மேலும், சென்னை அணியின் கேப்டனான இவரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இவரை மஞ்சள் வீரர் என்றும், தல என்றும் ரசிகர்கள் அழைப்பர். இவர் தனது 41-வது வயதிலும் ஐபிஎல் கோப்பையை சென்னை அணிக்காக வென்றார்.

இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இவரது ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை, இன்னும் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் தோனி தன் 42வது பிறந்தநாளை கொண்டாடினார்.  இவரது பிறந்தநாளை ரசிகர்கள் பலவாறு கொண்டாடினார்கள். ஐதராபாத்தில் டோனிக்கு 52 அடியில் முழு நீல கட் அவுட் வைத்தனர்.

சமூக வலைத்தளங்களில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும்  கூறி வந்தனர். இந்நிலையில் தல தோனி தனது செல்ல நாய்குட்டிகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய அழகிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ  அந்த வைரல் வீடியோ…