பிரபல சீரியல் நடிகர் ராஜ்கமலின் பிரம்மாண்ட வீட்டில் நடந்த திருட்டு… பறிபோன விலையுயர்ந்த பொருட்கள்… நடந்தது என்ன?..

சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று அபியும் நானும். அதில் அபியின் வளர்ப்பு தந்தையாக நடித்தவர் தான் பிரபல சீரியல் நடிகர் ராஜ்கமல். இவர் கடந்த 2003ஆம் ஆண்டு டிவி சீரியலில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் சீரியலை தாண்டி வெள்ளித்திரையில் சரோஜா, லிங்கா, நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

   

இவர் சீரியல் நடிகை லதா ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். நடிகை லதா ராவ் பல சீரியல்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி செல்வி மற்றும் திருமதி செல்வம் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு பிரபல நடன ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அது மட்டும் இல்லாமல் பல திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு லாரா மற்றும் ராகா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தற்போது இருவருமே பிசியாக நடித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து வீடு கட்டி இருக்கிறார்கள்.

இந்த வீட்டை பிரம்மாண்டத்தின் உச்சமாக ராஜ்கமல்- லதா ராவ் கட்டி முடித்து இருக்கின்றனர். இந்த வீட்டை பிரபலங்கள் சூட்டிங்காக மட்டுமே பார்த்து பார்த்து கட்டி இருப்பதாக கட்டியிருக்கின்றனர். மேலும், இரண்டு பெரிய ஹால், 4 பெட்ரூம், கார் பார்க்கிங், கிச்சன், பூஜை அறை என எல்லாவற்றிலும் பிரம்மாண்டமாக செய்து இருக்கிறார்கள். தற்போது இவர்களுடைய ஷூட்டிங் வீடு தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த நிலையில் இவர்களின் பங்களா வீட்டில் நடந்திருக்கும் திருட்டு சம்பவம் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, இந்த பங்களாவின் பின்புற கதவின் பூட்டை உடைத்து விலையுயர்ந்த டிவி, மோட்டார் உள்ளிட்ட பல பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.