விஜய் ஆண்டனி மகள் இறப்பு… காரணம் இதுதானா..? பேட்டியில் மருத்துவர் சொன்ன தகவல்…!!

மீராவின் இறப்பு

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மகள்மகள் மீரா (வயது 16) செப்டம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், தனது தந்தை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

   

பின் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அவரின் மகள் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், திரை பிரபலங்கள் பலர் அவரின்  வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

மருத்துவர் கூறிய தகவல்

அண்மையில் நடந்த நேர்காணலில் பிரபலமான மனநல மருத்துவர் ஒருவர் பங்கேற்ற போது, விஜய் ஆண்டனியின் மகளது மரணத்திற்கான காரணம் பற்றி பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, டீன் ஏஜில் இருக்கும் குழந்தைகள் பலருக்கு வீடுகளில் தனி அறை ஒதுக்கப்படுவதால், அவர்களுக்கு குடும்பத்தினருடன் மனம் திறந்து பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே அவர்களுக்கு என்ன நேர்ந்தாலும், பெற்றோரிடம் தெரிவிப்பதில் சிரமம் ஏற்படும் நிலையில், அவர்களுக்கு மன அழுத்தத்தை கொண்டு போய் விடுகிறது.

இவ்வாறு மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் தவறான முடிவு எடுக்கின்றனர். இதே நிலைமை விஜய் ஆண்டனியின் மகள் விஷயத்திலும்  நிகழ்ந்திருக்கலாம்.  இவ்வாறு அந்த பேட்டியில் மனநல மருத்துவர்  பேசியுள்ளார்.