விஜய்யோடு என்ன பிரச்சனை…? லியோ திரையிடுவதில் சிக்கல்…. வெளியான அரசாணை…!

நடிகர் விஜய்க்கும் தமிழக அரசுக்கும் இடையே மறைமுகமாக மோதல் இருப்பதாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக தமிழ் திரை உலகில் பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் என்றாலே திருவிழாக்கள் போல் கொண்டாடப்படும். மேலும் திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டு விடும். ஆனால், சென்னையில் திரையரங்கிற்கு வெளியே ஒரு ரசிகர் லாரியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததால், இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளும், அதிகாலை காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

   

தற்போது வரை, அதிகாலை காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்காமல் இருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்போடு வரும் 19-ஆம் தேதி அன்று வெளியாகிறது. பக்கத்து மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இத்திரைப்படம்  அதிகாலை 4 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது.

எனவே, தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்திருக்கிறது. அதற்கு, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழகத்தில் லியோ திரைப்படமானது அக்டோபர் 19ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து சிறப்பு காட்சிகள் திரையிடப்படும்.

ஆனால், அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தமிழக அரசு அதிகாலை கட்சிக்கு அனுமதி வழங்கவில்லை என்றாலும், விஜயை, “தளபதி” என்று குறிப்பிட்டிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, தமிழக அரசிற்கும் நடிகர் விஜய்க்கும் மறைமுகமாக மோதல் இருந்து வருவதாகவும், எனவே தான் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்றும் தகவல் பரவி வந்தது. ஆனால், தமிழக அரசின் இந்த அரசாணை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.