ஆஹா.. இந்த மனசு எல்லாருக்கும் வருமா..? கபடி விளையாட்டில் உயிரிழந்த இளைஞர்…. 10 லட்சம் நிதி உதவி வழங்கிய பிரபல நடிகர்..

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த விமல் ராஜ் என்ற கபடி வீரர்,கடந்த சில நாட்களுக்கு முன்பு கபடி போட்டியின் பொது எதிர்பாராத விதமாக கபடி விளையாடிக் கொண்டிருக்கும்போதே உ யிரி ழந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிய நிலையில் தமிழகத்தை இந்த சம்பவம் உலுக்கியது.

அவருக்கு பலரும் தங்கள் ஆ ழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வந்தனர். அது மட்டுமல்லாமல் உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்திற்கு பலரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். அவ்வகையில் உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்தை நேரில் சந்தித்த நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ், அவர்களுக்கு ஆறுதல் கூறி 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.

அதன் பிறகு வீட்டில் இருந்த விமல்ராஜ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தனது நடிப்பில் வெளியாக உள்ள படத்தில் வரும் காட்சியைப் போலவே விமல்ராஜ் இ றப்பு உள்ளது. நமது நாடு ஒரு சிறந்த விளையாட்டு வீரரை இ ழந்து ள்ளது. இவரை கௌரவிக்கும் வகையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *