ஒட்டுமொத்த கூட்டத்தை தன் வசப்படுத்திய சிறுமி..!! தமிழர் பாரம்பரிய விளையாட்டு எப்பவுமே கெத்து தான்..!

சிலம்பம் என்பது ஒரு தற்காப்புக் கலை இது தமிழ் மக்களுக்கு ஒருவகையில் வீர விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர் ஒரு தடியைக் கையாளும் முறை, கால் மற்றும் உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாக்கும் முறை தமிழர் வீர விளையாட்டில் ஒன்றாகும். இந்த கலையை கற்க குறைந்த பட்சம் ஆறு மாத காலம் ஆகும்.

இந்த காலத்தில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் கற்றுவருகின்றனர் திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும் இது தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில் பிரபலமானது.

   

உடல் சமநிலை, தசை ஆற்றல், தசை வலிமை மற்றும் வேகம் இவை எல்லாம் இந்த சிலம்பம் சுற்றுவதும் மூலம் நலன்கள் பெறும். இந்த வீடியோவில் வரும் சிறுமி இவளோ திறமையாக சிலம்பம் சுற்றுகிறார் மிகவும் பாராட்டக்கூடிய செயலாகும் அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்.