கடன் தொல்லையால் வீட்டை விற்க முயன்ற நபருக்கு அடித்த ஜாக்பாட் … மனுஷன் குடுத்துவச்சவன் பா …

உணவு ,உடை , இருப்பிடம் என்பது ஒரு மனிதனுக்கு மிக அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது ,பணம் இருபவர்கள் ஒரு பெரிய மாளிகையாகவே கட்டிவிடலாம் ஆனால் நடுத்தர மக்களை சேர்ந்தவர்களுக்கு இது ஒரு கனவு தான் , சொந்த வீட்டை கட்டி பார்ப்பது என்பது பலருக்கும் இன்று வரையில் கனவாகவே இருந்து வருகிறது ,

அப்படி ஒரு சூழ்நிலையில் கேரள மஞ்சேஸ்வரை சேர்ந்தவர் முகமது பாவா . இவர் மனைவி அமினா ,இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இந்த நிலையில் இவர் 8 மாதங்களுக்கு முன்னர் 2000 சதுர அடியில் தனது கனவு வீட்டை முகமது கட்டி குடும்பத்துடன் குடிபெயர்ந்தார் .

பெரும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த இவரின் வீட்டை விற்பதற்கு முன்வந்தார் , அந்த வீட்டை வாங்குவதற்கு மற்றொருவர் பணம் கொண்டுவந்திருந்தார் அப்பொழுது இவர் வாங்கிய லாட்டரி சீட்டு ஒன்று 1 கோடி ஜாக்ஸ்பாட் அடித்தது ,வீட்டை விற்பதை முழுமைகாக மறந்துவிட்டார் .,