தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராதிகா. சமீபத்தில் ராதிகாவின் குடும்பத்தில் ஒருவராக இருந்த சிரில் என்பவர் கடந்த 21ம் தேதி காலமானார். அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ராதிகா கூறியிருந்தாவது, சிரில் அங்கிள் அல்லது நாங்கள் அவரை அன்புடன் சிரில் அண்ணா என்று அழைப்போம். அவர் எங்கள் குடும்பத்தில் முக்கிய பங்கு வகித்தவர். எங்களை வளர்த்தவர்.
கஷ்ட காலங்களில் எங்களுடன் இருந்தவர். எங்கள் அம்மாவுக்காக அனைத்தையும் தியாகம் செய்தவர். அவருக்கு குட்பை சொல்ல ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என்றார். இந்நிலையில் சிரிலை நினைத்து ராதிகா இன்னும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார். எதுவும் நிரந்தரம் இல்லை. சிரில் அண்ணாவை நினைத்து கவலையில் இருக்கிறேன் என்று கூறி அழும் எமோஜியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ராதிகாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், ரசிகைகள் கூறியிருப்பதாவது, உண்மை தான் ராதிமா. தயவு செய்து அழாதீங்க. நீங்கள் அழுவதை பார்த்தால் எங்களுக்கும் அழுகை வருகிறது. இந்த பூமியில் பிறக்கும் அனைவரும் ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும். சிரில் அண்ணா உங்களுடன் தான் இருக்கிறார். தைரியமாக இருங்க ராதிமா என தெரிவித்துள்ளனர்.
Cyril uncle or as we fondly call him- Cyril Anna.
He was a integral part of our family, he bought us up and stood by us through the lowest of lows.
He sacrificed everything for our mom and was her rock.
Share so many memories with him that is hurts so much to say good bye! RIP pic.twitter.com/vrpJjb387Q— Radikaa Sarathkumar (@realradikaa) March 21, 2021