திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!! கைப்பட எழுதியிருந்த கடிதம்!! பின்னணி என்ன?

இந்தியாவில் திருமணமான மூன்று மாதத்தில் இளம்பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்னாவை சேர்ந்தவர் பிரஞ்சல் கோல் (24). இவர் பெண் மருத்துவர் ஆவார்.

   

இவருக்கும் தயனேஷ்வர் என்ற இளைஞருக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் பிரஞ்சல் நேற்று முன் தினம் திடீரென வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிஸார் பிரஞ்சல் சடலத்தை கைப்பற்றினார்கள். இதோடு தனது தந்தை பெயரை தலைப்பாக போட்டு கடிதம் ஒன்றை பிரஞ்சல் எழுதி வைத்திருந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

அந்த கடிதத்தில், எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிரஞ்சல் சடலம் தகனம் செய்யப்பட்டது.

இதையடுத்து அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.