பிரபல நடிகையுடன் திருமண கோலத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்.. வெளியான புகைப்படம்

சின்னத்திரை சீரியலில் TRPயின் உச்சத்தில் இருக்கும் முன்னணி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தான். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியலை பலரும் வரவேற்கிறார்கள். இதில் அறிமுக நடிகை ரோஷினி கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் கண்ணம்மா என்ற பெண்ணை சுற்றியே நடக்கிறது. சீரியலில் பாரதி-கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என்பது தான் ரசிகர்களின் ஏக்கம்.

   

அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். அந்த சீரியலில் பக்காவான குடும்பக் குத்துவிளக்காகவும், மேக்கப்பே இல்லாமல் கருப்பாகவும் வலம் வருவார் கண்ணம்மா. இந்த சீரியலில் கதாநாயகியின் தந்தையாக நடித்து வரும் நடிகர் வெங்கடேஷ் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி, பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே சேர்த்துள்ளார்.

மேலும் இவரை தவிர்த்து, அருண், கண்மணி, அகிலன் என பல கதாபாத்திரங்கள் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் நடிகர் அகிலன், முன்னணி நடிகை காஜல் அகர்வாலுடன் திருமண கோலத்தில் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் திருமண விளம்பரத்தின் போது என்றும், இதில் ஒரு கதாபாத்திரமாக அகிலன் நடித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..