வாலிபங்கள் ஓடும்.. வயதாக கூடும்.. ஆனால் அன்பு மாறாதது.. தாத்தாவேட அன்ப பாருங்க.. நீங்களே வாழ்த்துவீர்கள்..!

கணவன், மனைவி பாசம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. இன்று பலரும் அந்த பாசத்தின் மேன்மை புரியாமலேயே வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.அதனால் தான் சின்ன, சின்ன விசயங்களுக்கெல்லாம் எமோஷனல் ஆகி விவகாரத்து வரை சென்றுவிடுகின்றனர்.

ஆனால் கணவன், மனைவி உறவு என்பது முழுக்க அன்பால் மட்டுமே கட்டுப்பட்டது. அதற்கு பணம், காசு இருக்கிறதா என்னும் கவலையோ அல்லது, அழகோ ஒரு விசயமே இல்லை. அதை உணர்ந்து கொண்டவர்கள் வாழ்வு வரமாகி விடுகிறது. இங்கேயும் அப்படித்தான் ஒரு தாத்தா, தன் மனைவியின் மீது ரொம்ப பாசம் வைத்திருக்கிறார். அந்தப் பாட்டியால் நடக்கமுடியவில்லை. அவருக்கோ பாட்டியை ஆட்டோவில் அழைத்துச் செல்லும் அளவுக்கு வசதியில்லை. உடனே பாட்டியை தான் போகும் இடமெல்லாம் தூக்கிக் கொண்டு செல்கிறார் தாத்தா.

வாலிபங்கள் ஓடும். வயதாகக் கூடும். ஆனாலும் அன்பு மாறாதது என திரைப்படத்தில் வரும் பாடல் வரி அப்படியே நிஜமானது போல் இருக்கிறது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *