என்னதான் IT யில் வேலை பார்த்தாலும் நம் பாரம்பர்ய உடையான வேட்டி, சேலையில் இவர்கள் போடுற ஆட்டமே வேற லெவல்..

இசை, கலைக்கு மயங்காதவர் யாருமே இல்லை. இசையும், கலையும் இனம், மதம், மொழி என அத்தனையையும் கடந்தது. அந்த இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திப் பருகாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன்? பாம்பைப் பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் அந்த பாம்பு கூட மகுடி இசைக்கு மயங்குவதை நாம் பார்த்திருப்போம்.

   

அப்படியானால் மனிதர்களைக் கேட்கவும் வேண்டுமா? இங்கே அப்படித்தான். ஐடி கம்பெனி ஒன்றில் ஒரு பங்சன் வந்தது. நாள் முழுக்க செம டென்ஷனாகவே இருக்கும் ஐடி கம்பெனி ஊழியர்கள் ஆண்களும், பெண்களுமாக சேர்ண்டு அதில் பட்டையைக் கிளப்பும் நடனத்தைப் போட்டனர். அதிலும் இளம்பெண்கள் நம் பாரம்பர்ய உடையான சேலையிலும், இளைஞர்கள் வேட்டி, சட்டையிலும் சும்மா பட்டையைக் கிளப்பிவிட்டனர்.

அதிலும் சேலை கட்டிய ஐடி பெண்கள் தலையில் கரகமும் வைத்து ஆட பார்த்தவர்களே ஆச்சயத்தில் மூழ்கிப் போயினர். நாள் முழுக்க கம்யூட்டரின் முன்னே இருக்கும் அவர்கள் பாரம்பர்யக் கலையிலும், நடனத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்களேன்…