விஜய் டிவி சீரியலுக்கு போட்டியாக சன் டிவியில் தொடங்கிய புதிய சீரியல்.. இரண்டுமே ஒரே மாதிரி இருக்கே! ஷா க்கில் ரசிகர்கள்

பல ஆண்டுகளாக சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி தான். தொலைக்காட்சிகளில் சன் மற்றும் விஜய்க்கு தான் கடும் போட்டி நடக்கிறது. பல வருடங்களாக சன் டிவி தான் முதல் இடத்தில் உள்ளது, அந்த இடத்தை பிடிக்க தான் மற்ற டிவிக்கள் போராடி வருகிறார்கள். அந்த போராட்டத்தில் விஜய் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது என்றே கூறலாம்.

   

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா. அந்த சீரியலில் பக்காவான குடும்பக் குத்துவிளக்காகவும், மேக்கப்பே இல்லாமல் கருப்பாகவும் வலம்வருவார் கண்ணம்மா. விளம்பர மாடலாக நடித்து வந்தவருக்கு அந்த சீரியல் மிகநல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. விஜய்யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் பல மாதங்களாக டிஆர்பியில் இரண்டாம் இடத்தை பிடித்து வந்தது.

இந்த சீரியல் ஆரம்பத்தில் கருப்பு நிற நாயகி என்கிற விளம்பரத்துடன் தான் தொடங்கியது, இப்போது அந்த கான்செப்டில் இருந்து டிராக் மாறியுள்ளது. இப்போது சன் தொலைக்காட்சியும் கருப்பு நிற நாயகி என்ற அடையாளத்தோடு சுந்தரி என்ற சீரியலை தொடங்க உள்ளனர். இதைப்பார்த்த ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் போல லட்சுமி ஸ்டோர்ஸ் வந்தது மாதிரி பாரதி கண்ணம்மா Vs சுந்தரியா என கமெண்ட் செய்து வருகின்றனர்.