நடிகை வனிதாவுடன் ரீ என்ட்ரி கொடுக்கும் 80ஸ் நாயகன் மைக் மோகன்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்…

80-களில் தமிழ் சினிமாவின் ரொமான்ஸ் ஹீரோவாக கலக்கியவர் மைக் மோகன். தற்போது நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். ‘ஹரா’ என்ற படத்தில் ‘தாதா 87’ படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கத்தில் நடித்து வருகிறார்.

   

நடிகை குஷ்பு இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மோகனுடன் குஷ்பு நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தைஎஸ்.பி.மோகன்ராஜ் தயாரித்து வருகிறார். சில மாதங்களுக்கு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. மைக் மோகன் மீண்டும் நடிப்பில் களமிறங்கியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதுவரை காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்த மோகன் தற்போது முழு ஆக்ஷன் படத்தில் களமிறங்கியுள்ளார்.

இந்த படத்தில் குஷ்பு, யோகி பாபு, சாருஹாசன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன் உள்பட பல நடித்துள்ளனர். விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான வனிதா விஜயகுமார் இணைந்துள்ளார்.

நடிகர் மோகன் உடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வனிதா விஜயகுமார் ’நான் மோகனின் மிகப்பெரிய ரசிகை என்றும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற பல நாள் கனவு தற்போது நிறைவேறி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் மோகன் இந்த படத்தில் ஜொமோட்டோ ஊழியர் ஆக நடித்து வருகிறார் என்பது இந்த புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

தற்பொழுது இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.