குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்ற நடிகை சுஜா வருணி… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..

நடிகையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டு மருமகளும் தான் சுஜா வருணி. இவர் கடந்த 22 ஆம் ஆண்டு வெளியான பிளஸ்-2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

   

அதனைத் தொடர்ந்து கஸ்தூரிமான், மிளகா, அடாவடி, எங்கள் ஆசான் மற்றும் இந்திரலோகத்தில் நா அழகப்பன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றியைத் தேடித் தந்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் ஆன சிவாஜி தேவ் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

சிவாஜி தேவ் தமிழில் சிங்கக்குட்டி மற்றும் புது முகங்கள் தேவை உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதனைத் தவிர ஏராளமான குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சுஜா மற்றும் சிவாஜி தேவ் தம்பதியினருக்கு அத்வைத் என்ற மகன் உள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் சத்ரு என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு சுஜா வருணி அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை.

பின்னர் த்ரிஷ்யம் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர்.

அதன்படி தற்போது தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sujatha Sujavarunee (@itssujavarunee)