பிரபல காமெடி நடிகர் சாம்ஸுக்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகளா?… என்னது மகனும் ஒரு பிரபல நடிகரா?…

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக காமெடி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் சாம்ஸ். இவர் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான ‘காதல் மன்னன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பு பல படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

   

ஹீரோக்களின் வாரிசுகள்  ஒரு பக்கம் வாரிசு நடிகர்களாக களமிறங்கி வருகின்றனர். இன்னொரு புறம் காமெடி நடிகர்களும் தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல காமெடி நடிகரான சாம்ஸ் மகன் யோஹன் சினிமாவில் தற்பொழுது அறிமுகமாக இருக்கிறார்.

நடிகர் சாம்ஸ் மகன் யோகன் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பதற்காகவே முறைப்படி கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சியும், தனியார் திரைப்பட கல்லூரியில் இயக்குனர் பயிற்சியும் முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் “FALL” என்ற வெப் சீரிசில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான சாம்ஸ் தனது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து ஏர்போர்ட்டில் எடுத்துக் கொண்ட சில அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அட இவர்கள் தான் நடிகர் சாம்ஸின் மனைவி மற்றும் மகனா?’ என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.