திடீரென குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் தனுஷ்… இது தான் காரணமா?…. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். . இந்த ஆண்டு இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான ‘வாத்தி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

   

இப்படத்தையடுத்து தனுஷ் தமிழில் தனது 50 வது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘D50’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் ‘வடசென்னை 2’, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதை தொடர்ந்து இந்தியில் பிரபல திரைப்படமான ‘ராஞ்சனா’, ‘அத்ரங்கி ரே’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் தனுஷ். ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடதக்கது.

தற்பொழுது தனுஷ் தமிழில் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் திடீரென தனது குடும்பத்தாருடன் சேர்த்து திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு நடிகர் தனுஷ் தன் மகன்களுடன் மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்தியுள்ளார். தற்பொழுது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.