குடும்பத்துடன் ஜாலியாக வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ஜோதிகா – சூர்யா… வெளியான அழகிய புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்பொழுது இவர் தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

   

அந்த வகையில் சூரரைப்போற்று, ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலையும் வாரி குவித்தது.

சமீபத்தில் சூரரைப்போற்று திரைப்படம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படம் புராணக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார் .

கங்குவா படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் சூர்யா தனது உடல் எடையை பல மடங்கு கூட்டிய புகைப்படங்களும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது.

நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே. இவர்களுக்கு தற்பொழுது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகி இருந்த நடிகை ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

அவ்வப்பொழுது நடிகை ஜோதிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் தங்கள் குழ்நதைகளுடன் ஜாலியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்கு எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.