பிரேக் அப்பை டான்ஸ் ஆடி மகிழ்ச்சியோடு கொண்டாடிய ‘இரவில் நிழல்’ பட ஹீரோயின்… வீடியோ வைரல்…

தமிழில் ‘கேங் ஆஃப் மெட்ராஸ்’ படத்தில் அறிமுகமாகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சாய் பிரியங்கா ரூத். ‘கேளடி கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான கோவை பொண்ணு சாய் பிரியங்கா ரூத். ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ நெடுந்தொடரில் நித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை கவர்ந்தார்,

   

தெலுங்கில் ‘இன் தி நேம் ஆஃப் காட்’ என்ற வெப்சீரிஸில் நாயகியாக நடித்துள்ளார்.அதை தொடர்ந்து பல படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘இரவின் நிழல் ’ படத்தில் முக்கிய வேடத்தில் பிரியங்கா ரூத் நடித்திருந்தார். அடுத்ததாக இவர் ‘பயமறியா பிரம்மை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் ‘‘பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் என்றால் எனக்கு உயிர். அந்த கதைக் களத்துக்காக காத்திருந்தேன். சமீபத்தில் அதுபோல ஒரு படமும் அமைந்துவிட்டதாகவும் இன்னும் அதற்கு பெயரிடப்படவில்லை. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்’’ எனவும் கூறியிருந்தார் சாய் பிரியங்கா ரூத்.

 

View this post on Instagram

 

A post shared by Sai priyanka ruth (@saipriyankaruth)

இந்நிலையில் சாய் பிரியங்கா ரூத்துக்கு சோஷியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் ஹாட் புகைப்படங்களுக்கு லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. தற்பொழுது இவர் ,அவர் காதலரை பிரேக்கப் செய்த விஷயத்தை தான் வீடியோவில் அறிவித்து இருக்கிறார். அவர் பிரேக்கப் ஆனதை டான்ஸ் ஆடி கொண்டாடி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sai priyanka ruth (@saipriyankaruth)