திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டையுடன் நடிகர் தனுஷ்… வெளியான புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவை தாண்டி தற்போது கோலிவுட் வரை கலக்கி கொண்டிருக்கிறார்.

   

தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக இருந்து வரும் இவருடைய நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் நடிகர் தனுஷ் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.

தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து தனுஷின் 50வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஆனால் சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்து பெறுவதாக அறிவித்த நிலையில் தற்போது இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

அங்கு தனுஷ் மொட்டை அடித்துக் கொண்ட நிலையில் தன்னுடைய 50வது படத்திற்காக புதிய கெட்ட பின் நடிக்கப் போகிறார் என இணையத்தில் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். தற்போது தனுஷ் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.