‘எதிர்நீச்சல்’ ஆதிரையின் உண்மையான கணவர் இந்த பிரபலம் தானா?… வைரலாகும் புகைப்படம்…

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இயக்குனர் திருச்செல்வம் அவர்கள் பெண்களை மையப்படுத்தி தரமாக எடுத்துவரும் தொடர் இது. பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை இந்த சீரியல் காட்டுகிறது, ஏகப்பட்ட பெண் ரசிகைகளின் பேவரெட் தொடராகவும் இது அமைந்துவிட்டது.

   

இந்த தொடரில் திருப்புமுனையாக அமையும் ஒரு கதைக்களம் ஒளிபரப்பானது, ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்று பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த டிராக் வந்தது. ஆனால் ரசிகர்கள் இயக்குனரின் இந்த முடிவில் கடும் கோபத்தில் உள்ளார்கள். ஆதிரையாக இந்த தொடரில் நடிக்கும் நடிகையின் நிஜ பெயர் சத்யா தேவராஜ்.

இவர் தனது பயணத்தை மாடலிங் மூலமாக தொடங்கி பிறகு சன் மியூசிக்கில் ஒரு விஜேவாக சின்னத்திரையில் நுழைந்து இருக்கிறார். ஒரு விஜேவாக மட்டுமல்லாமல் அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் செய்து இருக்கிறார். அந்த நேரத்திலே ஒரு சில விளம்பரங்களிலும் ஒரு நடிகையாக களமிறங்கி இருக்கிறார். அதைத்தொடர்ந்து தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “அருவி” சீரியலில் மலர் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அந்த நேரத்தில் தான் சத்யாவிற்கு திருமணம் முடிந்திருக்கிறது. இவருடைய கணவர் ஆனந்த். இவரும் ஒரு பிரபலமாக தான் இருந்து வருகிறாராம். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சத்யாவின் நடிப்பிற்கு தடை சொல்லாத கணவரால் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்பொழுது இவர் தனது கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.