விஜய் டிவி தீனாவின் பிரம்மாண்ட வீட்டை பாத்துருக்கீங்களா?… அம்மாடி எவ்ளோ பெரிய வீடு…. கிரஹபிரவேச புகைப்படங்கள் உள்ளே…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு?’ என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் விஜய் டிவி தீனா. அதிலும் இவர் போன் செய்து கலாய்க்கும் காட்சிகளை பார்ப்பதற்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

   

சிவகார்த்திகேயன், சந்தனம் போன்று தற்போது தீனாவும் தனது திறமையால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று ஜொலித்து வருகிறார். தனுஷ் இயக்கி நடித்த ‘பவர் பாண்டி’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், பின்னர் ‘தும்பா’ படம் மூலம் மேலும் பிரபலமானார்.

அதனை அடுத்து கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் இவரை தமிழ் சினிமாவில் மேலும் பிரபலமாக்கியது. இதைத்தொடர்ந்து தளபதியின் ‘மாஸ்டர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தீனா.

மேலும் இவர் அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நடிகர் தீனா தனது சொந்த ஊரில் மிகப் பிரமாண்டமாக பெரிய வீடு ஒன்றை காட்டியுள்ளார். அந்த வீட்டின் கிரகப் பிரவேசம் இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதில் அவரது குடும்பத்தினரும், நெருங்கிய சொந்தங்களும் கலந்து கொண்டுள்ளனர். தற்போது நடிகர் தீனா வீட்டின் கிரஹபிரவேச புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.