நடிகர் ஜெயம் ரவியின் அக்காவை பாத்துருக்கீங்களா?… இதோ நீங்கள் இதுவரை பார்த்திடாத அவரின் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.  இவர் தனது சினிமா பயணத்தை ஆளவந்தான் திரைப்படத்தில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவி இயக்குனராக தொடங்கினார். இதைத்தொடர்ந்து அவரது தந்தை தயாரித்த இரண்டு தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

   

2002ல் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய சூப்பர் ஹிட் அடித்த ஜெயம் திரைப்படத்தின் தமிழ் ரீ மேக்கில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கினார் நடிகர் ஜெயம் ரவி. இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம்,

தில்லாலங்கடி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார் .குடும்பங்கள், இளைஞர்கள், குழந்தைகள் என இவரது திரைப்படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்தை இதற்கு ஒரு சான்றாக கூறலாம்.

இத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இவர் தற்பொழுது இறைவன், சைரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஜெயம் ரவியின் தந்தை மோகன் ஒரு பிரபல திரைப்பட எடிட்டர் என்பதும், மேலும் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா பிரபல இயக்குனர் என்பதும் நமக்கு தெரியும். ஆனால், ஜெயம் ரவிக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார் என்பது பல பேர் அறிந்திடாத ஒன்று. அவருடைய பெயர் ரோஜா மோகன். தற்பொழுது நடிகர் ஜெயம் ரவி தனது சகோதரியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….