கோலாகலமாக நடந்து முடிந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை மகனின் திருமணம்… வாழ்த்து கூறும் பிரபலங்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகின்றனர். இவரது நடிப்புக்கென்றே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். இவருக்கென தற்பொழுது பெரும் ரசிகர் பட்டாளமே இணையத்தில் உருவாகியுள்ளது.

   

தற்போது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.  பாக்கியலட்சுமி  சீரியலில் மனைவி பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்து ராதிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பார். அந்த சீரியலில் இவர் தான் டெரரான நெகடிவ் கேரக்டர்.இவரை சீரியலில் பார்த்து திட்டுபவர்கள் தான் அதிகம் பேர் இருப்பார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு சாதாரண குடும்பத்தில் குடும்பத் தலைவிகள் படும் கஷ்டங்கள் அதனை சமாளித்து அவர்கள் முன்னேறும் விதம் இவற்றை கதையாக அமைத்துள்ளனர்.

கணவர் தன்னை விவாகரத்து செய்தாலும் சோர்ந்து போகாத பாக்யா தனி ஆளாக நின்று தன்னுடைய குடும்பத்தை கவனித்து வருவது மட்டுமல்லாமல் சுயமாகவும் தொழில் செய்து வருகிறார்.இப்படி தினம் தோறும் புதுவிதமான கதை களத்துடன் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

தற்பொழுது இந்த சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் பாக்கியாவின் மாமியாராக நடித்து வருபவர் நடிகை ராஜலட்சுமி அம்மா. இவரது மகனின் திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது, இந்த திருமண விழாவில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

அது தொடர்பான புகைப்படங்களை கம்பம் மீனா இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.