‘அவரை எப்ப மீட் பண்ணாலும் irritate பண்ணிட்டேதான் தான் இருப்பேன்’… நேரலையில் பிரபல நடிகரை பற்றி கூறிய நடிகர் சித்தார்த்…

தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இதைத்தொடர்ந்து ஆயுத எழுத்து, எனக்குள் ஒருவன், காவியத்தலைவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகர் சித்தார்த்.

   

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஆங்கிலத்திலும் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என பன்முக திறமைகளோடு திரையுலகில் வலம் வந்து கொண்டுள்ளார்

 

 தற்பொழுது இவர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன்2’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவ்வப்பொழுது சர்ச்சைகளில் சிக்கும் இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானதே அதிகம். அந்தவகையில் நடிகர் சித்தார்த்  நடிகை அதிதி ராவை காதலிப்பதாகசமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது பிரபல சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சித்தார்த் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் , ‘நடிகர் கமலஹாசனை தான் எப்போது பார்த்தாலும் irritate தான் செய்வேன்’ மேலும் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் மற்றும் சில சுவாரசியமான சம்பவங்கள் பற்றி கூறியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)