கடலுக்கு நடுவே தங்களது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா… வெளியான கியூட் வீடியோ ….

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சூர்யாவுடன் இணைந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து குஷி, அருள், மன்மதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

   

தொடர்ந்து இவர் தமிழில் நடித்த படங்கள் மிகப் பெரிய வெற்றியை அடைய பல  மொழிகளிலும் ஜோதிகாவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. முன்னணி நடிகையாக வலம் வந்த காலத்திலேயே நடிகை ஜோதிகா சூர்யாவை  2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் கடந்த 2015ல் வெளியான  ’36 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதை தொடர்ந்து கடைசியாக அவர் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

தற்பொழுது மலையாள நடிகர் மம்முட்டியுடன் ஜோடியாக நடிகை ஜோதிகா ‘காதல்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்பொழுது கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. புராணக் கதையை அடிப்படையாக கொண்ட இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஜோதிகா.  இவர் தற்பொழுது தனது கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் இணைந்து வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நடுக்கடலில் நடுவே தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய அழகிய வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.  இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)