தமிழ் திரையுலகின் மாஸ் ஹீரோவாக கொடி கட்டி பறந்த தளபதி விஜய்க்கு கோடான கோடி ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அவரின் திரைப்படங்கள் எப்படி இருந்தாலும், வசூலில் சக்கை போடு போட்டுவிடும். இப்படிப்பட்ட நிலையில் சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட போவதாக விஜய் அறிவிப்பு வெளியிட்டு விட்டார்.
இப்போதைக்கு தமிழ் சினிமாவில் அடுத்த தளபதி யார்? என்ற போட்டி தான் நிலவிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், சிவகார்த்திகேயன் தான் அடுத்து விஜய் இடத்தை நிரப்புவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருப்பதாவது, இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் மார்ச் மாதம் 12ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
அத்திரைப்படத்தின் கதை துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய இரண்டும் கலந்த கலவையாக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் அடுத்த விஜய் நீதான் என்று சிவகார்த்திகேயனின் நண்பர்கள் அவரை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதாக பிஸ்மி கூறி இருக்கிறார்.