பிரம்மாண்டத்தின் உச்சம்…. திரை நட்சத்திரங்களால் அதிரப்போகும்… அர்ஜுன் மகள் திருமணம்…!

தமிழ் திரையுலகில் ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதிரடி கதாநாயகனாக அவர் நடித்த பல திரைப்படங்கள் தற்போது வரை ரசிகர்களின் விருப்பமானதாக அமைந்திருக்கிறது. தற்போது 62 வயதாகும் அர்ஜுன், சிறிதும் இளமை மாறாமல் அதே துடுக்குடன் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார்.

   

அர்ஜுன் அவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகர் விஷாலுடன் பட்டத்து யானை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. அவருக்கும், பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவிற்கும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், வலைப்பேச்சு பிஸ்மி, அர்ஜுன் மகளுக்கு வரும் ஜூன் மாதம் பத்தாம் தேதி கிரகம்பாக்கத்தில் இருக்கும் அர்ஜுனின் சொந்த தோட்டத்தில் வைத்து மிக பிரம்மாண்டமாக  திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும், அர்ஜுன் மற்றும் தம்பி ராமைய்யா இருவருமே தமிழ் திரையுலகில் முக்கியமான பிரபலங்கள் என்பதால், திரை நட்சத்திரங்களின் வரவால், திருமணம் களைகட்டப்போகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.