‘அதை மட்டும் கவனமா பாத்துக்கோங்க’… ‘மாமன்னன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் மாரி செல்வராஜை எச்சரித்த நடிகர் வடிவேலு…

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் மாரி  செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து ‘மாமன்னன்’ திரைப்படம் ரிலீஸாகி உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில் ,கீர்த்தி சுரேஷ் என முன்னணி நட்சத்திரங்கள் பலர்  நடித்துள்ளனர்.

   

இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக தற்பொழுது அமைச்சர் பொறுப்பில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்’ மாமன்னன்’ தான் தனது கடைசி படம் எனக்கு அறிவித்துவிட்டார். இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது . தற்பொழுது இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது.

இப்படத்தில் வடிவேலுவும் ஹீரோவிற்கு நிகரான ஒரு ரோலில் நடித்துள்ளார். இதுவரை வடிவேலு நடிக்காத வித்தியாசமான ரோலில் இந்த படத்தில் அவர் நடித்திருப்பதால் ரசிகர்களும் ஆர்வமாக படத்தை காண்கின்றனர். இப்படம் அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அடுத்தடுத்து அவருக்கு நல்ல வாய்ப்புகள் குவியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாரி செல்வராஜ் உதயநிதியின் கூட்டணியில் உருவான முதல் படம் இது என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இதைத்தொடர்ந்து மாமன்னன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் வடிவேலு குறித்து கூறியதாவது,

இத்திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு சீரியஸான கதாபாத்திரத்தை தான் கொடுத்ததாகவும், அதற்கு வடிவேலு ‘இது போன்ற கதாபாத்திரங்களில் தான் இதுவரை நடித்ததில்லை என்றும், நான் சீரியஸாக யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது மக்கள் சிரித்து விட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை. அதை மட்டும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று இயக்குனரை எச்சரித்துள்ளார் வடிவேலு.