கணவருடன் ஜாலியாக Bali ட்ரிப் சென்ற அனிதா சம்பத்… வெளியான அழகிய புகைப்படங்கள்..

தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த சினிமா வரை சென்ற பல நடிகைகளில் ஒருவர் தான் அனிதா சம்பத்.

   

இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் மற்றும் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இன்று இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இந்நிலையில் அதில் போட்டியாளராக கலந்து கொண்ட இவருக்கு ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். இவர் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் இந்த உலகிற்கு ஒரு பெண் சத்தமாகவே பேசவே முடியாது.

இந்த உலகிற்கு எப்போதும் மென்மையான சிரித்து பேசும் பெண்ண தான் பிடிக்கும், நாம் இந்த நவீன உலகத்தில் இன்னும் பின்தங்கி தான் இருக்கிறோம் என பேசி இருந்தார்.

இவர் பிரபாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் தன் வாழ்நாள் கனவான மிகப் பெரிய வீட்டை கட்டி முடித்ததாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அது மட்டுமல்லாமல் சொந்தமாக துணிக்கடை நடத்தி வரும் அனிதா அடிக்கடி வித்தியாசமான ஆடை அணிந்து வீடியோவாக பகிர்வதுவழக்கம் .

இந்நிலையில் அனிதா சம்பத் தற்போது இந்தோனேஷியா நாட்டில் உள்ள சுற்றுலா தலமான Bali இடத்திற்கு தனது கணவருடன் சென்றுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்  வைரலாகி வருகிறது.