தமிழ் சினிமாவில் ‘நாடோடிகள்’ என்ற திரைப்படத்தில், சசிகுமாருக்கு தங்கையாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிநயா. இவர் இயற்கையிலேயே வாய் பேச சிரமப்படுவர். அதுமட்டுமல்லாமல் கேட்கும் திறனும் குறைவு. இருப்பினும் அவர் தனது தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டியிழுத்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் சம்போ சிவசம்போ, ஈசன், ஆயிரத்தில் ஒருவன், குற்றம்23, வீரம், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் இதுவரை இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
மேலும் அபிநயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரும் நடிகர் விஷாலும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றெல்லாம் இணையத்தில் வதந்திகள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நடிகை அபிநயா தனது சோசியல் மீடியா பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக உள்ளார். இவர் தனது ஹாட் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். தற்பொழுது இவர் தனது நியூ ஹேர் ஸ்டைலில் பதிவு செய்த வீடியோ ஒன்று ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…
View this post on Instagram