குடும்பத்துடன் ஈத் பண்டிகையை கொண்டாடிய நடிகை பூர்ணா… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூர்ணா. கேரளாவை சேர்ந்த இவரின் நிஜ பெயர் ஷாம்னா காசிம். பின்னர் சினிமாவிற்காக பூர்ணா என்று மாற்றிக் கொண்டார்.

   

இவர் முதல் முதலாக நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.

அதை தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் ஆடு புலி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான தலைவி, திரிஷ்யம், அகண்டா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இவர் இறுதியாக தமிழில் தலைவி மற்றும் விசிதிரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் துபாய் தொழிலதிபர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்திருந்தார்.

அதேசமயம் கர்ப்பமாக இருக்கும் போது பல போட்டோ சூட் புகைப்படங்களையும் எடுத்து அதனை பகிர்ந்த இவர் வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் பகிர்ந்தார்.

இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையின் புகைப்படங்களை அவர் அண்மையில் வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது குடும்பத்துடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்களை பூர்ணா instagram பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.