சூரியின் ‘விடுதலை’ பட நடிகையா இது?… ஆள் அடையாளமே தெரியலையே … லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் ஜிவி பிரகாஷ். இவர் இசையமைப்பாளராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் கோலிவுட்டில் கலக்கி வருகிறார்.இவரின் தங்கையான பவானி ஸ்ரீ தற்பொழுது வெளியான விடுதலை திரைப்படத்தில்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் விடுதலை. இத்திரைப்படத்தில் தமிழரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பவானி ஸ்ரீ. இதற்கு முன்பு பவானி ஸ்ரீ ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ‘கா.பெ. ரணசிங்கம்’ என்ற திரைப்படத்திலும்,

பாவக்கதைகள் எனும் ஆந்தாலஜி என்ற தொடரிலும் நடித்திருந்தார். தற்போது விடுதலை திரைப்படத்திற்கு பிறகு நடிகை பவானி ஸ்ரீ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் பவானி ஸ்ரீ. இவர் அவ்வப்பொழுது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் த ற்போது பவானி ஸ்ரீ AI தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்ட தனது போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அவரா இது? என அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து  வருகின்றனர்.