‘சூரிய வம்சம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹேமலதாவுக்கு திருமணமாகி குழந்தை உள்ளதா?… வைரலாகும் புகைப்படம் இதோ…

தமிழ் திரையுலகில் குழந்தை பருவதிலேயே  நடித்து  மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் ஹேமலதா. 1987 ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி பிறந்தார்.

   

இவர் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படமான’ பாட்ஷா’ படத்தில் வில்லன் ரகுவரன் மகளாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதைத்தொடர் இவர் 1996 ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘பூவே உனக்காக’ என்ற படத்தில் குழந்தைகள் நட்சத்திரமாக நடித்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடித்த ‘சூரிய வம்சம்’  படத்தில் தேவயானி குழந்தையாக இவர்  நடித்திருப்பார்.

இப்படத்தில்  இவரின் ஸ்டைல், நடை, பேச்சு, போன்றவை மக்கள் மத்தியில் மிகுந்த  வரவேற்பு பெற்றது.

இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக இனியவளே, காதல் கொண்டேன்,மதுர ,ஜுவி, என பல படங்கள் நடித்துள்ளார்.

இவர் நடிகை மட்டுமல்ல நடன கலைஞரும் கூட.   வெள்ளிதிரையை தொடர்ந்து  சின்னத்திரையிலும் நடிக்க தொடங்கினார்.

இவர் 1999 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராதிகா நடித்த  ‘சித்தி’ சீரியலில் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகினார்.

இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுகளையும் பெற்றார். விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள் ‘ ராகவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக பிரபலமானார்.

‘கனா காணும் காலங்கள்’ சீரியலை தொடர்ந்து இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததன் காரணமாக, சன் டிவியில் ‘மகள்’ சீரியலும் விஜய் டிவியில் ‘அன்பே வா’ என்ற சீரியல்களிலும் நடித்திருந்தார்.

இவர் சின்னத்திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த சீரியல் தான் ‘தென்றல்’ இந்த சீரியலில் தீபா பிரபாகர் என்ற  கதாபாத்திரத்தில் நடித்து  பல பாராட்டுகளையும் தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது.இவர் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார்.

தற்போது தனது குடும்பத்தின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் சூரிய வம்சத்தில் நடித்த இந்த குழந்தைக்கு திருமணமாகி குழந்தை உள்ளதா என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றன.