வெல்வெட் உடையில்… வேற லெவல் அழகில்… ஜொலிக்கும் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்…. வைரலாகும் கலக்கல் போட்டோஸ்…

இளம் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து   ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

   

2017 ல் வெளியான ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.

இதை தொடர்ந்து மெர்க்குரி, மகாமுனி போன்ற திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

இவர் 2019ல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தையும், பெயரையும் பதிய வைத்தார்.

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக ரவுண்டு வருவார் என்று இவரை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனால் அதற்கு ஏற்றவாறு இவருக்கு பட வாய்ப்புகள் அமைகிறதா? என்றால் அது கேள்விக்குறியாக தான் உள்ளது.

பிகில் படத்தை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில், சில இளம் நடிகைகள் பட வாய்ப்புகள் இன்றி தவித்தனர். அதில் இந்துஜா ரவிச்சந்திரனும் ஒருவர்.

இவர் சினிமா மட்டுமல்லாமல் விளம்பர படங்கள் மற்றும் மாடலிங்கிலும் தற்பொழுது ஈடுபட்டு வருகிறார்.

தனது instagram பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை இந்துஜா. இவர் சமீப காலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை பட வாய்ப்புக்காக வேண்டி பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது வெல்வெட் உடையில் இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர்.