தமிழ் சின்னத்திரையில் ஏராளமான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி கடைசியில் விஜய் டிவியில் சேர்ந்தார் தொகுப்பாளினி ஜாக்குலின். இவர் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் ரக்சன் உடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இவர் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் அதில் அவரது குரலை கிண்டல் செய்வார்கள். ஆனால் அவர் அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு முன்னேறினார். தொகுப்பாளியாக பணியாற்றிய இவருக்கு விஜய் டிவி சீரியலில் நடிகையாக நடிக்க வாய்ப்பை வழங்கியது.
அதை தொடர்ந்து இவர் ‘தேன்மொழி பி ஏ’ சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார். இவ்வாறு சின்னத்திரை நடிகையாக பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த இவர், சமீப காலமாக சமூக வலைத்தளங்களிலும், சின்னத்திரையிலும் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.
தற்பொழுது இவர் தனது உடல் எடையை குறைக்க வெகுவாக முயற்சி செய்து வருகிறார். இதற்காக முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கடினமான உடற்பயிற்சிகளையும் செய்து வருகிறார்.அந்தவகையில் தற்பொழுது இவர் ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…
View this post on Instagram