சூப்பர் ஹிட்டான ‘எதிர்நீச்சல்’ சீரியல் இயக்குனர் திருச்செல்வத்தின் மனைவியை பாத்துருக்கீங்களா ?… இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்….

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியல் குடும்பப் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் பல ஆயிரக்கணக்கான இல்லத்தரசிகளை கவர்ந்துள்ளது ‘எதிர்நீச்சல்’. நாளுக்கு நாள் டிஆர்பியில் முன்னேறிக் கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியலை இயக்கும் இயக்குனர் தான் திருச்செல்வம்.

   

கோலங்கள் சீரியலை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு காரணம் இவர் தனது சீரியலை ரசித்து ஆத்மார்த்தமாக எடுப்பதுதான். இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது.

இயக்குனர் திருச்செல்வம் அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கி இருக்கிறார். இப்படி சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கிய இயக்குனர் திருச்செல்வத்தின் குடும்ப புகைப்படம் இணையத்தில் அவ்வளவாக  வெளியானது கிடையாது.

இந்நிலையில் இயக்குனர் திருச்செல்வம் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. திருச்செல்வம் அவர்களின் மனைவி பெயர் பாரதி என்றும், இவர் ஒரு சிவில் இன்ஜினியராக இருப்பதாகவும், ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதோ அவரின் புகைப்படம்….