பிரசவத்திற்காக உடலை உறுதி செய்யும் நடிகை நக்ஷத்ரா… அவரே வெளியிட்ட பிரசவகால யோகா வீடியோ…

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை நக்ஷத்ரா. இவர் ஜீ தமிழ் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். அந்த சீரியலில்  இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் கவர்ந்தது.

   

அதனை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வந்தார். இவர் கடந்த சில வருடங்களாக விஷ்வா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம்  இருவரும் உறவினர்கள் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இரு வீட்டார் முன்னிலையில் மிக எளிமையான முறையில் கோவிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.நட்சத்திராவின் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவர்களின் திருமணம் அவசர அவசரமாக நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நட்சத்திரா அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது வளைகாப்பு புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை நக்ஷத்ரா.

இவர் அவ்வப்பொழுது புகைப்படங்களையும் , வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது தான் பிரசவ கால யோகாவை செய்யும் அழகிய வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதோ அந்த வைரல் வீடியோ…